பாக்காதே என்ன பாக்காதே...

பாக்காதே என்ன பாக்காதே
கொத்தும் பார்வையாலே என்னை பாக்காதே
போகாதே தள்ளி போகாதே
கொடுத்ததை திருப்பி நீ கேட்க காதலும் கடனும் இல்ல
கூட்டத்தில் நின்னு பார்த்துக்கொள்ள நடப்பது கூத்தும் இல்ல

வேணாம் வேணான்னு நான் இருந்தேன்
நீ தானே என்னை இழுத்து விட்டே
போடி போடின்னு நான் தொரத்த
வம்புல நீ தானே மாட்டிவிட்ட
நல்லா இருந்த எ மனச
நாராக கிழிச்சு புட்ட
கருப்பா இருந்த என் இரவ
கலராக மாத்தி புட்ட

என்னுடம் நடத்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ளே இருந்த என் உசுர
வெளியே மிதக்க விட்ட

வேணான் வேணான்னு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
காணும் காணூனு நீ தேட காதல் ஒன்னும் தொலையலே
ஒன்ன இருந்த நியபகத்தை நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனிய இருக்கும் வலிய மட்டும் தனிய அனுபவிச்சேன்

பறவையின் சிறகுகள் பிரிஞ்சாதான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும் காதல் அதிகரிககும் ....

பாக்காதே என்ன பாக்காதே
கொத்தும் பார்வையாலே என்னை பாக்காதே
போகாதே தள்ளி போகாதே
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாதே
கொடுத்ததை திருப்பி நான் கேக்க கடனா கொடுக்கலையே
உனக்குள்ள தானே நானிருக்கேன் உன்னக்கது புரியலையே...