அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் இறுக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்த்துவிட்டேன் ...

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலை கோதி...
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்...
கையோடுதான் கைகோர்த்து நான்
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்...
வேறென்ன வேண்டும் உலகத்திலே...
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்த்துவிட்டேன் ...

நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே ...
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்.
உன் சீண்டலில் என் தேகத்தில்
புது ஜென்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்.
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்த்துவிட்டேன் ...

தூங்காத விழிகள் இரண்டு ...

தூங்காத விழிகள் இரண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று ...
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரை தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது ...

எந்தன் பாடல்களில் நீ நிலாம்பரி ...

கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே ...
நினைவென்னும் சோலைகுள் பூத்திட்ட அரும்பே

எந்தன் பாடல்களில் நீ நிலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்கதடி ...

வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலர்
நிலவளால் தங்கையென உன் ஜொலிப்பு சொல்லுடி வைர சிலையே ...

பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுடி அம்மம்மா

பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நாண செய்கை செய்தாய்

வைகைபோல் நாணத்தில் நனைகின்றேனே
வைகை நீ என்றுன்னை சொல்கின்றேனே ...

பச்சை அரிசி எனும் பற்கள் கொண்ட உன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகுதடி உன் நினைப்பு ...

வார்த்தை தென்றல் நீ வீசும் போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் ஜில் என்று நனைகின்றது
சிந்தும் தேன் கூட சிந்தொன்று புனைகின்றது ...

வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...

வாசமில்லா மலரிது
வசந்தத்தை தேடுது ...
வைகை இல்லா மதுரை இது
மீனாட்சியை தேடுது ...
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும் ...

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்ட வில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்த்து
உனக்கேன் ஆசை ரதி அவள் மேலே ...
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...

மாதங்களை எண்ண பண்ணிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலும் ஒன்று கூட்ட ...
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாண ...
வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...
வைகை இல்ல மதுரை இது... மீனாசியை தேடுது ...
எதெதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும் ...

வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...



உலகிலே அழகி நீதான் ...

உலகிலே அழகி நீதான்
எனக்குதான் எனக்குதான் ...
உனக்கு நான் அழகான சொல்
உண்மையைத்தான் உண்மையைத்தான்...


கேளடி கண்மணி ...

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி...

கானல் நீரால் திராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி...

நான் போட்ட மலர்மாலை மனம் சேர்க்கவில்லை
நீ தானே எனக்காக மடல் பூத்த முல்லை ....

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமை தங்கி நீயல்லவா...
நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னை தாலாட்டும் தாயால்லவா...

எதோ எதோ அனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போன போது ...
கை சேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது ...