என் கதை முடியும் நேரம் இது ...

என் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் ராகம் இது

அன்பினில் வாழும் உள்ளம் இது
அனையே இல்லா வெள்ளம் இது

இதயத்தில் ரகசியம் இருக்கின்றது
அது இதழ்களில் பிறந்திட தவிக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது, அதில்
உறவென்று அவளை நினைக்கின்றது ...

பேதைமை நிறைந்தது என் வாழ்வு, அதில்
பேதையும் வரைந்தது சில கோடு
விட்டென்று சிரிப்பது உள் நினைவு, அதன்
விட்டொன்று போட்டது அவள் உறவு ...

உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே, அதில்
பிரிவுகள் என்பதே இருக்காதே
ஒளியாய் தெரிவது வெறும் கனவு, அதன்
உருவாய் எரிவது என்மனது...

இரயில் பயணத்தில் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்...

அமைதிக்கு பெயர்தான் சாந்தி ...

அமைதிக்கு பெயர்தான் சாந்தி, அந்த
அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி

நீ கொண்ட பெயரை நான் உரைத்து கண்டேன் சாந்தி
நீ காட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி
நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி
நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி

எல்லோரும் வாழ்வில் தேடிடும் செல்வம் சாந்தி
என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி
எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி
என்னை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி ...

உன்னோடு வாழ்ந்த சிலகாலம் போதும் சாந்தி
மண்ணோடு மறையும் நாள்வரை நிலைக்கும் சாந்தி
கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி
பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி ...

தட்டி பார்த்தேன் தொட்டாகொச்சி

தட்டி பார்த்தேன் தொட்டாகொச்சி
தாளம் வந்தது பாட்டவச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எரிஞ்சா கண்ணு குளமாச்சி...

தேனாக நினைச்சி தான் உன்னை வளர்த்தேன், நீயும்
தேளாக கொட்டிவிட நானும் துடிச்சேன்...

தோழ் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல நான் தானே சீரட்டினேன்
யார்ரென்று நீ கேட்க ஆளகினேன்
போவென்று நீ விரட்டும் நாயாகினேன்

மலராக நெனைச்சி தான் உன்ன வளர்த்தேன்
நியும் முள்ளாக குத்திவிட நானும் தவிச்சேன்

பாதியிலே வந்த சொந்தம் பெருசு என்றே
ஆதி முதல் வளர்த்த என்னை வெறுத்து விட்ட
பாசம் வச்ச என் நெஞ்சு புண்ணகவே
புருசம் பக்கம் பேசிவிட்ட தங்கச்சிய ...

கிளியாக நினைச்சுதான் உன்னை வளர்த்தேன்
நியும் கொத்திவிட வலி பட்டு நானும் துடிச்சேன்